< Back
மாநில செய்திகள்
அறுவடை செய்த நெல் வயல்களில் தீப்பிடித்தது
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

அறுவடை செய்த நெல் வயல்களில் தீப்பிடித்தது

தினத்தந்தி
|
28 Feb 2023 12:15 AM IST

அறுவடை செய்த நெல் வயல்களில் தீப்பிடித்தது

தொண்டி

திருவாடானை தாலுகா கீழ்க்குடி கிராமத்தில் வைக்கோல் படப்பு ஒன்றில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் தீ பரவியுள்ளது. இதனை தடுக்க கிராம மக்கள் அளித்த தகவலின் அடிப்படையில் திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று வைகோல் படப்பில் பற்றிய தீயை அணைத்தனர்.

இதேபோல் கோவணி, மாதவன் கோட்டை கிராமங்களில் அறுவடை செய்யப்பட்ட நெல் வயல்களில் திடீரென தீப்பிடித்தது. தகவல் அறிந்த திருவாடானை தீயணைப்பு நிலைய அலுவலர் வீரபாண்டி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடங்களுக்கு சென்று தீயை அணைத்தனர்.

மேலும் செய்திகள்