< Back
மாநில செய்திகள்
திருவாரூர்
மாநில செய்திகள்
அறுவடை
|11 Sept 2023 12:15 AM IST
நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதியில் அறுவடைக்கு குறுவை நெற்பயிர்கள் தயாராகி வருகிறது.
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் வேளாண் கோட்டப்பகுதிகளில் 34 ஆயிரம் ஏக்கரில் பல்வேறு வகையான நெல்ரகங்கள் சாகுபடி பணியை விவசாயிகள் தொடங்கினர். இந்தநிலையில் முன் கூட்டியே மின் மோட்டாரை பயன்படுத்தி நிலத்தடி நீரில் குறுவை சாகுபடியை விவசாயிகள் படிப்படியாக தொடங்கினர். முன்கூட்டியே குறுவை சாகுபடி பணியை தொடங்கிய சித்தமல்லி, நகர், காளாச்சேரி, ராயபுரம், அரிச்சபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தற்போது பழுத்து நெல் மணிகள் அறுவடைக்கு தயாராகி வருகிறது.