< Back
மாநில செய்திகள்
சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலி சாமியார் கைது உடந்தையாக இருந்த தாயும் சிக்கினார்
ராமநாதபுரம்
மாநில செய்திகள்

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போலி சாமியார் கைது உடந்தையாக இருந்த தாயும் சிக்கினார்

தினத்தந்தி
|
25 Nov 2022 10:49 AM IST

பெண் தனது 10 வயது மகனையும், 8 வயது மகளையும் சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளார்.

திருப்பத்தூர்

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே உள்ள எஸ்.எஸ்.கோட்டை அடுத்த வேட்டங்குடி பட்டியை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 50). இவர் மானகிரி பகுதியில் வாடகை வீட்டில் வசித்து குறி சொல்லும் தொழில் செய்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் அவரிடம் குடும்ப பிரச்சினைக்காக ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த 35 வயது உடைய பெண் ஒருவர் குறி கேட்க வந்துள்ளார். அப்போது அந்த பெண்ணுக்கும், சாமியாருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

கணவருக்கு சரியான வேலை அமையவில்லை எனக் கூறி குறி பார்த்துள்ளார்.8 வயது மகளுக்கு அம்மாவசை இரவு சிறப்பு பூஜை செய்தால் செல்வம் பெருகும் என சாமியார் கூறியுள்ளார்.

இந்நிலையில் அந்த பெண் தனது 10 வயது மகனையும், 8 வயது மகளையும் சாமியாரிடம் அழைத்து சென்றுள்ளார்.அப்போது அந்த சிறுமிக்கு சாமியார் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது. இது குறித்து சிறுமியின் தந்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமாரிடம் புகார் அளித்தார். அவரது உத்தரவின்பேரில் நாச்சியாபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் குமார் வழக்குப்பதிவு செய்து போலி சாமியார் ராமகிருஷ்ணனையும், சிறுமியின் தாயாரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்