< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
கோவையில் 8-வது வாரமாக களைகட்டிய 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி
|25 Jun 2023 11:00 PM IST
என்.எஸ்.ஆர். சாலையில் 8-வது வாரமாக ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
கோவை,
போலீசார் மற்றும் பொதுமக்களிடையே நல்லுறவை வளர்க்கும் வகையில் சென்னை, கோவை பெரு மாநகரங்களில் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' (மகிழ்ச்சி தெரு) என்ற கொண்டாட்ட நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமைகளில் நடத்தப்பட்டு வருகிறது.
அந்த வகையில் கோவை என்.எஸ்.ஆர். சாலையில் 8-வது வாரமாக இன்று 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி உற்சாகமாக கொண்டாடப்பட்டது. ஆடல், பாடல் என களைகட்டிய 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சியில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை மகிழ்ச்சியுடன் பங்கேற்றனர்.