< Back
மாநில செய்திகள்
ஸ்ரீரங்கம் வாசிகளுக்கு  ஹேப்பி  நியூஸ்: வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்..!
மாநில செய்திகள்

ஸ்ரீரங்கம் வாசிகளுக்கு ஹேப்பி நியூஸ்: வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும்..!

தினத்தந்தி
|
7 Sept 2023 3:29 PM IST

வரும் 16ம் தேதி முதல் ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் வைகை எக்ஸ்பிரஸ் நின்று செல்லும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை,

வைகை அதிவிரைவு ரெயில், இனி திருச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஸ்ரீரங்கம் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. வைகை அதிவிரைவு ரெயில் இயக்கப்பட்டது முதல், ஸ்ரீரங்கம் மக்களின் நெடுநாள் கோரிக்கையாக இருந்து வந்தது இன்று தெற்கு ரெயில்வேயின் அறிவிப்பினால் நிறைவேறியிருக்கிறது.

இது குறித்து தெற்கு ரெயில்வே வெளியிட்டிருக்கும் அறிவிப்பில்,

செப்டம்பர் 16ஆம் தேதி முதல் வைகை அதிவிரைவு ரெயில் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தில் நின்று செல்லும். அதுபோல, மலைக்கோட்டை விரைவு ரெயில் கல்லக்குடி பழங்காநாத்தம் ரயில் நிலையத்தில் நின்று செல்லும். மன்னார்குடி - சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் கொரடாச்சேரி ரெயில் நிலையத்தில் நின்று செல்லும்.

மேலும், மயிலாடுதுறை - மைசூரு விரைவு ரெயில் புகழுர் ரெயில் நிலையத்தில் நின்று செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்