< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
நடிகர் கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து
|1 Jan 2023 10:15 AM IST
2023-வது ஆங்கில புத்தாண்டையொட்டி நடிகர் கமல்ஹாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிறந்துள்ள 2023 ஆங்கில புத்தாண்டு அனைவரின் வாழ்விலும் நன்மை, மகிழ்ச்சியை கொண்டு வர வேண்டும் என்பது எதிர்பார்ப்பாக உள்ளது. இதனிடையே, 2023 ஆங்கில புத்தாண்டையொட்டி பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம் என நடிகர் கமல்ஹாசன் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது,
ஆண்டுக் கணக்கில் ஒன்று கழிந்தது. புதிய ஒன்று நம்பிக்கை வாசல் வழியாகப் புகக் காத்து நிற்கிறது. திட்டங்கள் உருவாகட்டும். அவற்றைச் செயலாக மாற்றும் ஊக்கம் பிறக்கட்டும். புத்தாண்டு என்பது நம்பிக்கையைப் பற்றிக்கொள்ளும் ஒரு சந்தர்ப்பம். அனைவருக்கும் என் வாழ்த்து என கூறியுள்ளார்.