< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
சமண, சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகள் - டி.டி.வி.தினகரன்
|21 April 2024 10:50 AM IST
மகாவீரரின் போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி உயரிய நெறிமுறைகளுடன் வாழ்ந்திட உறுதியேற்போம்.
சென்னை,
அ.ம.மு.க.பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
பகவான் மகாவீரர் அவதரித்த தினத்தை மகாவீர் ஜெயந்தியாக கொண்டாடி மகிழும் சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு, அமைதி, அகிம்சை, வாழ்க்கை, மனிதநேயம் பற்றி அனைவரும் ஏற்றுக் கொள்ளும் வகையில் எக்காலத்திற்கும் பொருந்தக் கூடிய மகாவீரரின் போதனைகளை மக்கள் அனைவரும் பின்பற்றி உயரிய நெறிமுறைகளுடன் வாழ்ந்திட உறுதியேற்போம் எனக் கூறிக்கொண்டு, சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை எனது மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.