< Back
மாநில செய்திகள்
அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன்
மாநில செய்திகள்

அதிமுக - பாஜக கூட்டணி மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சி: நயினார் நாகேந்திரன்

தினத்தந்தி
|
5 Sept 2024 1:49 PM IST

நடிகர் விஜய்யை பார்த்து ஆளுங்கட்சி அஞ்சுகிறது என்று நயினார் நாகேந்திரன் கூறினார்.

நெல்லை,

நெல்லை பாஜக எம்.எல்.ஏ நயினார் நாகேந்திரன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

அதிமுக - பாஜக இடையே இணக்கம் ஏற்பட்டு கூட்டணி மீண்டும் இணைந்தால் மகிழ்ச்சிதான்; அதிமுகவில் பெரும் பதவியில் இருந்து விட்டு பாஜகவில் இணைந்தேன். எனக்கு கட்சி பதவி முக்கியம் இல்லை. எம்.எல்.ஏ. பதவியை துறந்துவிட்டு பாஜகவில் இணைந்த விஜயதரணிக்கு நிச்சயம் பதவி கிடைக்கும்.

தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சரியில்லை. தமிழகம் முழுவதும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் புழக்கம் அதிகரித்துள்ளன. தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சம்பவங்கள் தமிழகத்தில் நடைபெறுகின்றன. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிநாட்டில் இருந்தாலும் தமிழகத்தில் என்ன நடக்கின்றன என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

நடிகர் விஜய்யை பார்த்து ஆளுங்கட்சி அஞ்சுகிறது. விஜய் மாநாட்டிற்கு அனுமதி வழங்கினால் எந்த பிரச்சினை இல்லை. தமிழ்நாட்டில் எந்தவொரு கட்சி ஆரம்பித்தாலும் அதற்கு சுதந்திரம் உண்டு; கட்சி மாநாட்டிற்கு தமிழக அரசு கண்டிப்பாக அனுமதி அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும் செய்திகள்