திருவள்ளூர்
கும்மிடிப்பூண்டி அருகே தூக்குப்போட்டு தொழிலாளி தற்கொலை
|கும்மிடிப்பூண்டி அருகே கூலித்தொழிலாளி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே உள்ள முல்லைவாயல்மேடு கிராமத்தை சேர்ந்தவர் சேகர் (வயது 50). கூலித்தொழிலாளி. இவர் கடந்த மாதம் 25-ஆம் தேதி வீட்டில் உள்ள மின்விசிறியில் சேலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயற்சித்ததாக கூறப்படுகிறது.
இதனைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி சேகர் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து கூலித்தொழிலாளி சேகரின் தற்கொலைக்காக காரணம் குறித்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட கொண்டைகரை கிராமத்தில் ஆலமரம் ஒன்றில் ஆண் சடலம் தூக்கில் தொங்கியவாறு கிடப்பதாக மீஞ்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஆலமரத்தின் கிளையின் ஒன்றில் தூக்கில் தொங்கியவாறு கிடந்த அடையாளம் தெரியாத 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலத்தை போலீசார் மீட்டனர். பின்னர் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனை அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த நபர் யார் எந்த ஊரைச் சார்ந்தவர் சாவுக்கான காரணம் என்ன என்பதை குறித்து பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் கொண்டைகரை கிராமத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.