< Back
மாநில செய்திகள்
ரேஷன் கடை விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை
திருப்பூர்
மாநில செய்திகள்

ரேஷன் கடை விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை

தினத்தந்தி
|
6 Dec 2022 11:35 PM IST

மடத்துக்குளம் அருகே ரேஷன் கடை விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

மடத்துக்குளம் அருகே ரேஷன் கடை விற்பனையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

ரேஷன்கடை விற்பனையாளர்

மடத்துக்குளத்தை அடுத்த பார்த்தசாரதி புரத்தைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் (வயது 53). இவரது மனைவி கவிதா. இவர்களது மகன் விக்னேஷ். சுப்பிரமணியன் கடந்த 25 வருடமாக கொழுமத்தில் உள்ள கூட்டுறவு ரேஷன்கடையில் விற்பனையாளராக பணிபுரிந்து வந்தார்.

இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக மூச்சு திணறல் நோய் பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் வேலைகளை சரிவர கவனிக்க முடியாமல் மன உளைச்சலில் இருந்துள்ளார்.

தூக்குப்போட்டு தற்கொலை

இந்த நிலையில் நேற்று அதிகாலை 5 மணி அளவில் தூங்கி எழுந்த சுப்பிரமணியன் வீட்டுக்கு அருகில் உள்ள மாட்டுத்தொழுவத்தில் மாடுகளுக்கு தீவனம் வைப்பதற்காக சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் திரும்பி வராததால் அவரது மனைவி கவிதா பால் கறப்பதற்காக மாட்டுத் தொழுவத்துக்குச் சென்றுள்ளார்.

அங்கு கணவர் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்ததை பார்த்து கதறி அழுதார். உடனடியாக அருகில் இருந்தவர்களின் உதவியோடு அவரை மீட்டு உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாகத் தெரிவித்தார்.

போலீஸ் விசாரணை

இது குறித்து சுப்பிரமணியனின் மகன் விக்னேஷ் அளித்த புகாரின் பேரில் குமரலிங்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்