< Back
மாநில செய்திகள்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு மாணவி தற்கொலை
|22 Aug 2023 1:45 AM IST
தூக்குப்போட்டு மாணவி தற்கொலை
கிணத்துக்கடவு
கிணத்துக்கடவு அருகே உள்ள தாமரைக்குளம் காட்டுநாயக்கர் காலனியை சேர்ந்தவர் குருவாயூரப்பன். ஜோசியம் பார்க்கும் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் புவனேஸ்வரி(வயது 22). பொள்ளாச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார்.
இந்த நிலையில் புவனேஸ்வரிக்கு திருமணம் செய்து வைக்க குருவாயூரப்பன் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளார். ஆனால் நேற்று வீட்டில் யாரும் இல்லாதபோது, புவனேஸ்வரி திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவர் ஏற்கனவே ஒருமுைற விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அவர் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்பது குறித்து கிணத்துக்கடவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.