< Back
மாநில செய்திகள்
நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகை கையாடல்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகை கையாடல்

தினத்தந்தி
|
10 Aug 2022 11:05 PM IST

சங்கராபுரம் நிதிநிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகையை கையாடல் செய்தது தொடர்பாக 8 ஊழியர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு,

சங்கராபுரத்தில் தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் சங்கராபுரம் பகுதியை சேர்ந்த வாடிக்கையாளர்கள் பலர் தங்களது நகையை அடகு வைத்து பணம் பெற்றுள்ளனர். இந்த நிலையில் நிதிநிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை நிறுவன நிர்வாகிகள் தணிக்கை செய்தனர். அப்போது வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகையை நிறுவன ஊழியர்கள் கையாடல் செய்ததோடு, அந்த நகைக்கு பதில் கவரிங் நகைகளை வைத்திருந்ததும் தெரிந்தது. இதனால் நிறுவன நிர்வாகிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து திருக்கோவிலூர் நிதிநிறுவன கிளை மேலாளர் ராஜசேகர்கவுடு (34) சங்கராபுரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதில் வாடிக்கையாளர்கள் அடகு வைத்த நகைகளை கையாடல் செய்துவிட்டு அதற்கு பதில் கவரிங் நகைகளை வைத்து மேலாளர் ரஞ்சிதா உள்ளிட்ட 8 ஊழியர்கள் மோசடி செய்துள்ளனர். இதன் மூலம் நிதி நிறுவனத்துக்கு சுமார் ரூ.3 லட்சத்து 79 ஆயிரம் இழப்பு ஏற்பட்டுள்ளது.

போலீசார் விசாரணை

எனவே இது குறித்து உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் அவர் கூறியிருந்தார். அதன்பேரில் சங்கராபுரம் நிதி நிறுவன மேலாளர் ரஞ்சிதா, பிரகாஷ், பாலகிருஷ்ணன், சுதாகர், ரஞ்சித்குமார், திருவிக்ரமன், அஜய், ராஜ்குமார் ஆகிய 8 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்