ராமநாதபுரம்
கல்வெட்டு அருங்காட்சியத்தில் ஒப்படைப்பு
|கல்வெட்டு அருங்காட்சியத்தில் ஒப்படைப்பு
பனைக்குளம்
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவை ஊராட்சி பகுதியில் பழமையான கல்வெட்டு ஒன்று இருப்பதாக அதே ஊரைச் சேர்ந்த சதீஷ் என்பவர், ராமநாதபுரம் தொல்லியல் ஆய்வு நிறுவன தலைவர் ராஜகுருவுக்கு தகவல் கொடுத்தார். அவர் அங்கு ஆய்வு செய்ததில் கடந்த 80 ஆண்டுகள் பழமையான கல்வெட்டு என்பதையும், இந்தக் கல்வெட்டில் தமிழில் 'யா' என்னும் எழுத்து மேற்கிந்திய மொழிகளில் 'ச'வாகத் திரிந்து இருப்பதையும், சூதாபள்ளி என்பது யூதர்களின் பள்ளியாகவும் இருந்தது உள்பட பல்வேறு விளக்கங்களை அளித்தார். மேலும் கல்வெட்டில் உள்ள பிழார்ப்பள்ளி என்ற எழுத்து இருந்த இடம் சேதமடைந்து இருப்பதாகவும் தெரிவித்தார். இந்த கல்வெட்டை வருவாய்த்துறையினர் எடுத்துச் செல்ல வேண்டும் என மாவட்ட கலெக்டரிடம் அதே ஊரைச் சேர்ந்தவர் மனு கொடுத்து இருந்தார். இதையடுத்து அந்த கல்வெட்டு மாவட்ட அருங்காட்சியத்திற்கு கொண்டு எடுத்து செல்லப்பட்டு, ராமநாதபுரம் வருவாய் கோட்டாட்சியர் சேக் மன்சூர், வட்டாட்சியர் முருகேசன், பெருங்குளம் வருவாய் ஆய்வாளர் சரஸ்வதி, கிராம நிர்வாக அலுவலர் அனுராஜ், கிராம நிர்வாக உதவியாளர் கார்த்திக் உள்ளிட்டவர்கள் காப்பாட்சியரிடம் கல்வெட்டை ஒப்படைத்தனர்.