தஞ்சாவூர்
15 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
|கும்பகோணம் பகுதியில் தவறவிட்ட 15 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது
கும்பகோணம்:
தவறவிடப்பட்ட செல்போன்கள்
கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக செல்போன்களை தவற விட்டுச் சென்றனர். இதையடுத்து பொதுமக்கள் தங்கள் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட செல்போனை கும்பகோணம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதை தொடர்ந்து கும்பகோணம் குற்றப்பிரிவு போலீசார், தங்களிடம் செல்போன்களை காணவில்லை என்று வந்த புகார்களை ஆய்வு செய்தனர்.
15 பேரிடம் ஒப்படைப்பு
இந்த ஆய்வில் போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட செல்போன் குறிப்புகளோடு ஒத்துப்பார்த்ததில் 15 பேருக்கு சொந்தமான செல்போன் பற்றிய விவரங்கள் ஒத்துப்போனது. பின்னர் புகார்தாரர்கள் நேற்று மேற்கு போலீஸ் நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். அவர்களிடம் 15 செல்போன்களை கும்பகோணம் துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன், உரியவர்களிடம் செல்போனை ஒப்படைத்தார்.
இதுகுறித்து துணை போலீஸ் சூப்பிரண்டு கீர்த்திவாசன் நிருபர்களிடம் கூறியதாவது:- கடந்த சில மாதங்களாக கும்பகோணம் பகுதியில் போலீசாரால் கண்டெடுக்கப்பட்ட செல்போன்களை ஒப்படைத்துள்ளோம். செல்போனை வைத்து இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம்.
தொழில் நுட்பம் வளர்ச்சி
செல்போனை தவறவிட்டவர்கள் உடனடியாக போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தால் அந்த போனை போலீசார் விரைவில் கண்டுபிடிக்க மிகவும் ஏதுவாக இருக்கும். தொழில்நுட்பம் மிக வேகமாக வளர்ந்து வரும் நிலையில் செல்போன் திருடர்கள் செல்போனில் பல மாற்றங்கள் செய்து விற்பவர்களும் அதிகரித்து விட்டார்கள்.
எனவே தங்களது செல்போனை கவனமாக வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம். குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது போலீசார் கடுமையான நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் கும்பகோணம் சரக பகுதியில் செல்போன் மட்டுமல்லாது திருட்டுப் போன அனைத்து பொருட்களையும் விரைவில் மீட்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
இந்த பேட்டியின் போது கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்
ராஜேஷ்கண்ணன், போலீசார்கள் வேளாங்கண்ணி, மனோஜ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.