< Back
மாநில செய்திகள்
கடலூர்
மாநில செய்திகள்
கடலூரில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம்
|7 April 2023 12:15 AM IST
கடலூரில் மாற்றுத்திறனாளிகள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினா்.
மாற்றுத்திறனாளிகள் சுயதொழில் செய்ய கூட்டுறவு வங்கியின் மூலம் ரூ.1 லட்சம் வரை ஜாமீன் இல்லாமல் வட்டி இன்றி வழங்க வேண்டும். கடந்த ஆண்டு வீடு கட்டுவதற்கு மாற்றுத்திறனாளிகளுக்கு வட்டி இல்லா கடன் வழங்க தமிழக அரசு அரசாணை வெளியிட்ட நிலையில், இதுவரை கடன் வழங்கப்படவில்லை. அதனால் வீடு கட்ட வட்டியின்றி உடனடியாக கடன் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூர் மத்திய கூட்டுறவு வங்கி முன்பு மாற்றுத்திறனாளிகள் புதுவாழ்வு நலச்சங்கத்தினர் நேற்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முகம் தலைமை தாங்கினார். செயலாளர் அமரேசன், துணை தலைவர் பாலமுருகன், துணை செயலாளர் மணிகண்டன், இளைஞர் அணி செயலாளர் அறிவழகன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.