< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்கள், திருநங்கைகள்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்கள், திருநங்கைகள்வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம்

தினத்தந்தி
|
18 Oct 2023 12:15 AM IST

மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்கள், திருநங்கைகள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இரண்டு நாட்கள் நடக்கிறது.

தூத்துக்குடியில் மாற்றுத்திறனாளிகள், நரிக்குறவர்கள், திருநங்கைகள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க இன்றும், நாளையும் சிறப்பு முகாம் நடக்கிறது.

இது குறித்து தூத்துக்குடி தாசில்தார் பிரபாகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-

சிறப்பு முகாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவுபடி, தூத்துக்குடி மாவட்டதேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான செந்தில்ராஜ் வழிகாட்டுதலின்படி மாற்றுத்திறனாளிகள், விளிம்பு நிலை மக்களான நரிக்குறவர்கள், திருநங்கைகள் ஆகியோர் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை தாலுகா அலுவலகத்தில் நடக்கிறது.

படிவம்

இந்த முகாமில் வாக்காளர் பட்டியலில் புதிதாக பெயர் சேர்க்க படிவம் 6,பெயர் நீக்க படிவம் 7, வாக்காளர்பட்டியலில் திருத்தம் செய்ய, தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குள் முகவரி மாற்றம், ஒரு சட்டமன்ற தொகுதியிலிருந்து மற்றொரு சட்டமன்ற தொகுதிக்கு இடமாற்றம் செய்ய படிவம் 8, வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு படிவம் 6ஏ, மற்றும் சுய விருப்பத்தின் அடிப்படையில் வாக்காளர்பட்டியலில் ஆதார் எண் இணைப்பதற்கு படிவம் 6பி, ஆகிய படிவங்களை பூர்த்தி செய்து கொடுக்கலாம், என அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்