< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
21 Feb 2023 7:22 PM GMT

அம்பையில் கோரிக்கையை வலியுறுத்தி மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அம்பை:

அம்பையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அம்பை வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட இணைச்செயலர் அகஸ்தியராஜன் தலைமை தாங்கினார். அம்பை ஒன்றிய தலைவர் அண்ணாமலை, பொருளாளர் சங்கிலி பூதத்தான், உதவி தலைவர் தங்கம்மாள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றியச் செயலர் ஜெகதீஷ், விக்கிரமசிங்கபுரம் நகரச் செயலர் இசக்கிராஜன், கட்டுமானப்பிரிவு மாவட்ட தலைவர் சுரேஷ் ஆகியோர் பேசினர். பேராத்து பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சிகளில் 100 நாள் வேலைத்திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலையை உறுதிப்படுத்த வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

சேரன்மாதேவியில் யூனியன் அலுவலகம் அருகில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட இணைச் செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மாவட்ட பீடி தொழிலாளர் சங்க தலைவர் மாரிசெல்வம், வட்டார தலைவர் பழனிக்குமார் வட்டார செயலாளர் சேக்மைதீன், பத்தமடை செயலாளர் கண்ணன், முக்கூடல் செயலாளர் ஆரோக்கியசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் மாற்றுத்திறனாளிகளின் வாழ்வாதார கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி பாவூர்சத்திரத்தில் யூனியன் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் தங்கம் தலைமை தாங்கினார். விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் குணசீலன், சி.ஐ.டி.யு. பீடி சங்க இணை செயலாளர் ஆரிய முல்லை, மாதர் சங்க ஒன்றிய செயலாளர் சொர்ணம் உள்பட பலர் கலந்து கொண்டனர். தொடர்ந்து கீழப்பாவூர் பஞ்சாயத்து யூனியன் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மாரியப்பனிடம் கோரிக்கை மனுவை கொடுத்தனர்.

மேலும் செய்திகள்