< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
|10 Feb 2023 1:29 AM IST
சேரன்மாதேவியில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பஸ் நிலையம் அருகில் தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைக்கான சங்கம் சார்பில், ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் இசக்கிமுத்து தலைமை தாங்கினார். மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில் மாற்றுத்திறனாளிகளுக்கான நிதியை கடந்த ஆண்டைவிட குறைத்துள்ளதைக் கண்டித்து இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மாநில துணைத்தலைவர் நம்பிராஜன், மாவட்ட தலைவர் பெருமாள், மாவட்ட செயலாளர் முத்துமணிகண்டன், சேரன்மாதேவி வட்டார தலைவர் பழனிகுமார், வட்டார பொருளாளர் சேக்மைதீன் ஆகியோர் பேசினர். இதில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். செல்வசுந்தரி நன்றி கூறினார்.