< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
5 Feb 2023 12:15 AM IST

நெல்லையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் சங்கத்தின் சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. சங்கத் தலைவர் பெருமாள் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முத்துமணிகண்டன், துணைத் தலைவர் இசக்கிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில குழு உறுப்பினர் பாஸ்கரன் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

கடந்தாண்டு மத்திய பட்ஜெட்டில் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.240.39 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில் இந்த ஆண்டு ரூ.150 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

இதைக் கண்டித்தும், மாற்றுத்திறனாளிகளை பணியில் சேர்க்கும் தனியார் நிறுவனங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்கள் போட்டனர்.

மேலும் செய்திகள்