< Back
மாநில செய்திகள்
மாற்றுத்திறனாளிகள் குழு கூட்டம்
தூத்துக்குடி
மாநில செய்திகள்

மாற்றுத்திறனாளிகள் குழு கூட்டம்

தினத்தந்தி
|
23 July 2023 12:15 AM IST

கருங்குளம் வட்டார வள மையத்தில் வட்டார அளவிலான மாற்றுத்திறனாளிகள் குழு கூட்டம் நடந்தது.

ஸ்ரீவைகுண்டம்:

தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெஜினி வழிகாட்டுதலின்படி உதவி திட்ட அலுவலர் முனியசாமி, மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கான மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜ செல்வி ஆகியோர் ஆலோசனையின் பேரில் கருங்குளம் வட்டார வள மையத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார அளவிலான குழு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு வட்டார கல்வி அலுவலர் மரிய ஜெயசீலா தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் மாற்றுத்திறனாளி மாணவர்களை வீடு வீடாகச் சென்று எவரும் விடுபடாமல் கணக்கெடுத்தல், அவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல், மாற்றுத்திறனாளிகளுக்கு உபகரணங்கள் உடனே கிடைத்திட வழிவகை செய்திடவும், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை பற்றியும் கூறப்பட்டது. ஏற்பாடுகளை மாற்றுத்திறனாளிகளுக்கான வட்டார ஒருங்கிணைப்பாளர் பீபேகம், வட்டார வள மையம் மேற்பார்வையாளர் ஜெயமேரி அற்புதம் ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்