கிராம நிர்வாக அலுவலர்களுக்கு கைத்துப்பாக்கி? - டி.ஜி.பிக்கு தமிழக அரசின் உள்துறை கடிதம்
|வருவாய்த்துறை ஊழியர்கள் கோரிக்கை குறித்து விசாரித்து உரிய விவரத்தை அனுப்பி வைக்க டி.ஜி.பிக்கு தமிழக அரசின் உள்துறை கடிதம் எழுதியுள்ளது.
சென்னை,
டி.ஜி.பிக்கு தமிழக அரசின் உள்துறை கடிதம் எழுதியுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால், தற்காப்புக்காக தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கி வழங்க வருவாய்த்துறை ஊழியர்கள் கோரிக்கை வைத்தனர். அதன் தொடர்ச்சியாக வருவாய்த்துறை ஊழியர்கள் கோரிக்கை குறித்து விசாரித்து உரிய விவரத்தை அனுப்பி வைக்க டி.ஜி.பிக்கு தமிழக அரசின் உள்துறை கடிதம் எழுதியுள்ளது.
சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவில் உள்ள மானத்தாள் பகுதியில் மணல் கடத்திய டிராக்டர் மற்றும் பொக்லைன் வாகனத்தை கிராம நிர்வாக அலுவலர் வினோத்குமார் பிடித்தார். இதனால் ஏற்பட்ட பிரச்சனையில் உயிருக்கு அச்சுறுத்தும் சம்பவங்கள் நடப்பதால் கிராம நிர்வாக அலுவலர்களுக்கு தற்காப்புக்காக பயிற்சியும், தேவைப்படும் பட்சத்தில் கைத்துப்பாக்கியும் வழங்க வேண்டும் என்று வருவாய்த்துறை ஊழியர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இந்த நிலையில் இந்த கோரிக்கை குறித்து விசாரித்து, இதுகுறித்து எடுத்த நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தமிழக அரசின் உள்துறை அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.