தஞ்சாவூர்
தஞ்சை மாநகராட்சியின் ஓராண்டு சாதனைகள் அடங்கிய கையேடு
|தஞ்சை மாநகராட்சியின் ஓராண்டு சாதனைகள் அடங்கிய கையேடு
தஞ்சை மாநகராட்சியின் ஓராண்டு சாதனைகள் அடங்கிய கையேடு வீடு தோறும் வழங்கும் நிகழ்ச்சி நேற்று மங்களபுரம் முருகன் கோவில் அருகில் இருந்து நேற்று தொடங்கியது. இந்த நிகழ்ச்சியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் தொடங்கி வைத்து வீடு, வீடாக சென்று ஓராண்டு சாதனைகள் அடங்கிய கையேட்டை மக்களிடம் வழங்கினார். பின்னர் அவர் கூறும்போது, எனது ஓராண்டு பணி காலத்தில் தஞ்சை மாநகராட்சியின் அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களின் தேவை, மாநகர வளர்ச்சியின் தேவையை அறிந்து திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அனைத்து பணிகள், திட்டத்தின் நோக்கம் சிறந்த முறையில் பொதுமக்களை சென்றடைய துணை நின்று செயல்பட்ட மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், துணை மேயர் அஞ்சுகம் பூபதி மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், அனைத்து துறை அலுவலர்கள், நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் என்றார். நிகழ்ச்சியில் மாநகர் நல அலுவலர் சுபாஷ்காந்தி, செயற்பொறியாளர் ஜெகதீசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.