விழுப்புரம்
ஹால்டிக்கெட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்
|கிராம உதவியாளர் பணிக்கான எழுத்து தேர்வு: ஹால்டிக்கெட்டை இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்
விழுப்புரம்
விழுப்புரம் மாவட்ட வருவாய் அலகில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களை தகுதியான நபர்களை கொண்டு நிரப்ப இணையதளத்தின் மூலம் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. இதில் ஏற்பளிக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கான எழுத்துத்தேர்வு அடுத்த மாதம்(டிசம்பர்) 4-ந் தேதியன்று முற்பகல் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மையங்களில் நடைபெறவுள்ளது. இதற்கான ஹால்டிக்கெட் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இதனை www.cra.tn.gov.in, www.tn.gov.in, www.viluppuram.nic.in ஆகிய இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஹால்டிக்கெட் இல்லாதவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள். மேலும் விண்ணப்பதாரர்களின் பதிவு செய்யப்பட்ட செல்போன் எண்ணுக்கு அனுப்பப்பட்ட குறுஞ்செய்தியில் வரும் லிங்க்-ஐ பயன்படுத்தியும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த தகவலை மாவட்ட கலெக்டர் மோகன் தெரிவித்துள்ளார்.