< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் வரும் 28-ம் தேதி வெளியீடு
|24 Feb 2023 8:17 PM IST
11, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கு ஹால்டிக்கெட் வரும் 28-ம் தேதி வெளியீடுயாகிறது.
சென்னை,
11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்களுக்கான ஹால்டிக்கெட் வரும் 28-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
ஹால்டிக்கெட்டை http://dge1.tn.gov.in என்ற இணையதளத்தில் தேர்வர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. மேலும் விவரங்களை அதே இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என தேர்வுத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.