< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
பிளஸ்-2 பொதுத்தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியீடு
|20 Feb 2024 7:13 AM IST
மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பிளஸ்-2 பொதுத்தேர்வு நடைபெற உள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் பிளஸ்-2 பொதுத்தேர்வு வரும் மார்ச் 1-ம் தேதி தொடங்குகிறது. மார்ச் 1-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை தேர்வு நடைபெற உள்ளது.
இந்த நிலையில் பிளஸ்-2 மாணவர்களுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் ,
சம்பந்தப்பட்ட பள்ளி தலைமையாசிரியர்கள் இன்று பிற்பகல் முதல் www.dge.in.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதற்காக, "online portal" என்ற வாசகத்தினை 'click' செய்து "HIGHER SECONDARAY FIRST YEAR/ SECOND YEAR EXAM MARCH – 2024" என காணப்படும் பக்கத்தில், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள User ID, Password-ஐ பயன்படுத்தி மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம். என தெரிவிக்கப்பட்டுள்ளது.