அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் நாளை முதல் ஜனவரி 1-ஆம் தேதி வரை அரையாண்டு விடுமுறை..!!
|தமிழ்நாடு பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து தனியார் பள்ளிகளுக்கும் அரையாண்டு விடுமுறை தொடர்பாக தனியார் பள்ளிகள் இயக்குனர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
சென்னை,
2023-2024-ஆம் கல்வியாண்டு அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் 02.01.2024-ல் தனியார் பள்ளிகள் திறப்பு தொடர்பாக அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தனியார் பள்ளிகள்) அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தனியார் பள்ளிகள் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பள்ளிக் கல்வி இயக்குநரின் கட்டுப்பாட்டின்கீழ் உள்ள அரசு / அரசு உதவி பெறும் உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளுக்கு 2023-24-ஆம் கல்வியாண்டில் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப்பின் பள்ளிகள் திறக்கும் நாள்.02-01-2024 என பார்வையில் காணும் செயல்முறைகளில் மூலம் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர் /மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
எனவே, தமிழக பாடத்திட்டத்தில் செயல்படும் அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் அரையாண்டுத் தேர்வு விடுமுறைக்குப் பின் 02-01-2024 அன்று பள்ளிகள் திறக்கப்பட்டு செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கலாகிறது. இச்சுற்றறிக்கையினை அனைத்து வகை தனியார் பள்ளிகளுக்கும் அனுப்பி வைக்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தனியார் பள்ளிகள்) கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.