< Back
மாநில செய்திகள்
கரூர்
மாநில செய்திகள்
ஆதரவற்றோருக்கு முடிதிருத்தம்
|28 Aug 2023 11:39 PM IST
அன்னை தெரசா பிறந்தநாளை முன்னிட்டு ஆதரவற்றோருக்கு முடிதிருத்தம் செய்யப்பட்டது.
கரூர் பைபாஸ் ரவுண்டானா, சுக்காலியூர் செக்போஸ்ட், ராமகிருஷ்ணபுரம், சர்ச் கார்னர், பஸ் நிலையம், கோவை ரோடு, வையாபுரிநகர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஆதரவற்ற, மனநிலை பாதித்தோர் வசித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று அன்னை தெரசா பிறந்தநாளை முன்னிட்டு தனியார் அறக்கட்டளை சார்பில் ஆதரவற்ற, மனநிலை பாதித்தோர் 25-க்கும் மேற்பட்டவர்களை கண்டறிந்து அவர்களுக்கு முடி திருத்துதல், குளிக்க வைத்தல், புது ஆடை அணிவித்தல், காயங்களுக்கு மருந்து போடுதல் உள்ளிட்ட உதவிகளை அக்குழுவினர் செய்தனர். பின்னர் ஆதரவற்றோர்களுக்கு உணவு வழங்கினர்.
-----