திருப்பத்தூர்
ரூ.15 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல்
|வாணியம்பாடி அருகே ரூ.15 லட்சம் மதிப்பிலான குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.
வாணியம்பாடி
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி - நாட்டறம்பள்ளி சாலையில் ஆத்தூர்குப்பம் பகுதியில் ராமமூர்த்தி என்பவருக்கு சொந்தமான குடோன் மற்றும் கடை உள்ளது.
இந்த குடோனை கேத்தாண்டப்பட்டி பகுதியைச் சேர்ந்த ராஜு, பூவரசன் ஆகியோர் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பிளாஸ்டிக் பொருட்களை வைத்து விற்பனை செய்வதாக வாடகைக்கு எடுத்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலீசாருக்கு வந்த ரகசிய தகவலின்பேரில் வாணியம்பாடி டவுன் இன்ஸ்பெக்டர் நாகராஜன், தாசில்தார் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் முன்னிலையில் குேடானின் பூட்டை உடைத்து சோதனை செய்தனர்.
அப்போது குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ.15 லட்சம் மதிப்பிலான பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் குட்கா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட குட்கா மற்றும் கார்களை நாட்டறம்பள்ளி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் மலர் வழக்குப்பதிவு செய்து இதில் தொடர்புடையவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.