விழுப்புரம்
மயிலம் அருகே குட்கா கடத்தியவர் கைது
|மயிலம் அருகே குட்கா கடத்தியவர் கைது செய்யப்பட்டாா்.
மயிலம்,
மயிலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமி தலைமையிலான போலீசார், கூட்டேரிப்பட்டு ரெட்டணை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ரெட்டணை கூட்டு பாதை அருகே சாக்கு மூட்டையுடன் நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் வல்லம் கிராமத்தை சேர்ந்த திருமலை மகன் செல்வம் (வயது 30) என்பதும், அவர் வைத்திருந்த சாக்கு மூட்டையில், ரூ.20 ஆயிரம் மதிப்பிலான குட்கா பொருட்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து, செல்வத்தை கைது செய்து, அவரிடம் இருந்த குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சித்தானங்கூர் பஸ் நிறுத்தத்தில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த காந்தலவாடி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் சரண்ராஜ் (20) என்பவரை திருவெண்ணெய்நல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பார்த்தசாரதி தலைமையிலான போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.