< Back
மாநில செய்திகள்
அரசு பள்ளி அருகே குட்கா விற்ற கடைக்கு சீல்
சென்னை
மாநில செய்திகள்

அரசு பள்ளி அருகே குட்கா விற்ற கடைக்கு 'சீல்'

தினத்தந்தி
|
24 Jan 2023 12:27 PM IST

சென்னை அரசு பள்ளி அருகே குட்கா விற்ற கடைக்கு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ‘சீல்’ வைத்தனர்.

சென்னை வடபழனி, ஆற்காடு சாலையில் உள்ள அரசு பள்ளி அருகே ரகமதுல்லா என்பவர் நடத்தி வரும் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்கப்படுவதாக கூறி ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு அபராதம் விதிக்கப்பட்டது. ஆனாலும் ெதாடர்ந்து அவரது கடையில் குட்கா, புகையிலை விற்று வந்தது தெரிந்தது. இதையடுத்து ரகமதுல்லா கடை மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உணவு பாதுகாப்பு துறை கமிஷனருக்கு போலீசார் கடிதம் அனுப்பினர். அதன்படி உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், அரசு பள்ளி அருகே குட்கா விற்ற ரகமத்துல்லா கடைக்கு 'சீல்' வைத்தனர்.

மேலும் செய்திகள்