< Back
மாநில செய்திகள்
சேலம்
மாநில செய்திகள்
குட்கா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது
|8 Nov 2022 1:00 AM IST
குட்கா விற்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சேலம் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரிசியப்பன் (வயது 55). இவர் தின்பண்டங்கள் விற்பனை செய்வது போல் மோட்டார் சைக்கிளில் வைத்து குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக காரிப்பட்டி போலீசாருக்கு தகவல் வந்தது. போலீசார் அவரிடம் சோதனை நடத்தினர். அவரிடம் குட்கா பொருட்கள் இருந்தது தெரிந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து குட்கா பொருட்கள் விற்பனை செய்து வரும் அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீஅபினவ் பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் கார்மேகம், அரிசியப்பனை குண்டர் சட்டத்தில் கைது செய்ய உத்தரவிட்டார். இதையடுத்து குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டதற்கான நகலை சேலம் மத்திய சிறையில் உள்ள அரிசியப்பனிடம் போலீசார் வழங்கினர்.