< Back
மாநில செய்திகள்
குட்கா விற்றவர் கைது, கடைக்கு சீல்
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

குட்கா விற்றவர் கைது, கடைக்கு சீல்

தினத்தந்தி
|
25 Aug 2022 11:15 PM IST

குட்கா விற்றவர் கைது, கடைக்கு சீல் வைக்கப்பட்டது.

ஆலங்காயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயசங்கர், காவலர் பாஸ்கர் உள்ளிட்டோர் அடங்கிய குழுவினர் தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள குட்கா மற்றும் பான் மசாலா விற்பனை செய்யப்படுகிறதா என்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.நிம்மியம்பட்டு பகுதியில், வேலாயுதம் (வயது 41), என்பவரது பெட்டிக்கடையில் சோதனைசெய்ததில் கடையில் பதுக்கி வைத்திருந்த 50 குட்கா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, கடை உரிமையாளர் வேலாயுதத்தை கைது செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து அவரை சிறையில் அடைத்தனர்.

கடைக்கு சீல் வைக்குமாறு வருவாய்த்துறையினருக்கு போலீசார் பரிந்துரைத்ததின் பேரில், வாணியம்பாடி தாசில்தார் சம்பத், ஆலங்காயம் வருவாய் ஆய்வாளர் ராணி, கிராம நிர்வாக அலுவலர் சற்குணகுமார் உள்ளிட்டோர் அடங்கிய வருவாய் துறையினர், பெட்டி கடைக்கு சீல் வைத்தனர்.

மேலும் செய்திகள்