< Back
மாநில செய்திகள்
குட்கா விற்றவர் கைது
நீலகிரி
மாநில செய்திகள்

குட்கா விற்றவர் கைது

தினத்தந்தி
|
10 Jan 2023 12:15 AM IST

குட்கா விற்றவர் கைது செய்யப்பட்டார்.

கோத்தகிரி,

கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள்(குட்கா) விற்பனை செய்யப்படுகிறதா? என கோத்தகிரி போலீசார் தொடர்ந்து கடைகளில் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். இந்தநிலையில் நேற்று கோத்தகிரி சப்-இன்ஸ்பெக்டர் சேகர் தலைமையிலான போலீசார் கோத்தகிரி ராம்சந்த் சதுக்கம் பகுதியில் உள்ள கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர். அப்போது ஷாஜகான் என்பவரது கடையில் புகையிலை பாக்கெட்டுகள் விற்பனைக்காக வைக்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஷாஜகானை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்