< Back
மாநில செய்திகள்
43 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு
திருவள்ளூர்
மாநில செய்திகள்

43 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு பதிவு

தினத்தந்தி
|
3 Nov 2022 5:01 PM IST

பூச்சி அத்திப்பேடு பஜார் வீதி கடையில் 43 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பூச்சிஅத்திப்பேடு கிராமத்தில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட் கள் விற்பனை செய்யப்படுவதாக வெங்கல் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் தர்மலிங்கத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது தலைமையில் போலீசார் நேற்று மாலை பூச்சி அத்திப்பேடு பஜார் வீதியில் உள்ள ஒரு கடையில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்பொழுது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 43 கிலோ எடை கொண்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர்களான ஜேக்கப் ஆபிரகாம் (வயது 27), பிரதாப் என்ற பிரதாப் சிங் ஆகிய 2 வியாபாரிகள் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்