< Back
மாநில செய்திகள்
குட்காவை பதுக்கி வைத்து விற்றவர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

குட்காவை பதுக்கி வைத்து விற்றவர் கைது

தினத்தந்தி
|
4 Oct 2022 2:28 PM IST

திருத்தணி- பொதட்டூர்பேட்டை கூட்டு சாலை அருகே குட்காவை பதுக்கி வைத்து விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி சுப்பிரமணிய நகர் கம்பர் தெருவை சேர்ந்தவர் மகேஷ் (வயது 50). இவர் திருத்தணி- பொதட்டூர்பேட்டை கூட்டு சாலை அருகே பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இவர் கடையில் குட்கா பொருட்களை பதுக்கி வைத்து விற்பதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரது உத்தரவின்பேரில் தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் குமார் தலைமையிலான போலீசார் மகேஷ் கடையில் சோதனை செய்ததில் 12 கிலோ குட்கா பொருட்கள் சிக்கியது. இதையடுத்து தடைசெய்யப்பட்ட போதைப்பொருட்களை விற்பனை செய்த குற்றத்திற்காக மகேஷ்சை கைது செய்து திருத்தணி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

இது குறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்