மயிலாடுதுறையில் குட்கா பொருட்கள் பறிமுதல் - 3 கடைகளுக்கு சீல் வைப்பு
|மயிலாடுதுறையில் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு 3 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது.
மயிலாடுதுறை,
மயிலாடுதுறை மாவட்டத்தில் கஞ்சா மற்றும் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் பள்ளி மாணவர்கள் கஞ்சா உபயோகிப்பதாக வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக மாவட்டம் முழுவதும் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் கடைகளின் உரிமையாளர்களை போலீசார் கைது செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே பெசன்ட்நகர் பகுதியில் குட்கா பொருட்களை விற்பனை செய்த 3 கடைகளின் உரிமையாளர்களை டிஎஸ்பி வசந்தராஜ், இன்ஸ்பெக்டர் செல்வம் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். மேலும் கடைகள் நகராட்சி அலுவலர்கள் முன்னிலையில் சீல் வைக்கப்பட்டது. கடைகளுக்கு தலா ரூ.75 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஎஸ்பி வசந்தராஜ் எச்சரித்தார்.