< Back
மாநில செய்திகள்
குட்கா வழக்கு: சிபிஐ விசாரணைக்கு அனுமதி - தமிழக அரசு அதிரடி..!
மாநில செய்திகள்

குட்கா வழக்கு: சிபிஐ விசாரணைக்கு அனுமதி - தமிழக அரசு அதிரடி..!

தினத்தந்தி
|
23 July 2022 11:29 PM IST

குட்கா வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட 11 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

சென்னை,

குட்கா வழக்கு தொடர்பாக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் உள்ளிட்ட 11 பேரிடம் சிபிஐ விசாரணை நடத்த தமிழக அரசு இன்று அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட போதைப் பொருட்களை முறைகேடாக விநியோகித்தது, விற்பனை செய்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் உள்ளிட்ட 11 பேரிடம் விசாரணை நடத்த சிபிஐ கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த நிலையில் இதற்கு தமிழக அரசு இன்று அனுமதி வழங்கியுள்ளது. இதையடுத்து குட்கா வழக்கில் சிபிஐ விரைவில் விசாரணையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் செய்திகள்