கன்னியாகுமரி
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
|திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
திருவட்டார்:
திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டுவதால் நேற்று சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீர்
குமரி மாவட்டத்தில் கடந்த மாத இறுதியில் இருந்து தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
மேலும் கோதையாற்றின் குறுக்கே உள்ள திற்பரப்பு அருவியிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. அதே சமயத்தில் சாரல் மழையுடன் குளு, குளு சீசன் நிலவுவதால் அங்கு வரும் சுற்றுலா பயணிகள் இதமான சூழலை அனுபவித்து செல்கிறார்கள்.
உற்சாக குளியல்
இந்தநிலையில் நேற்று விடுமுறை நாள் என்பதால் திற்பரப்பு அருவியில் குளிக்க குமரி மாவட்டம் மட்டுமின்றி பிற மாவட்டங்கள் மற்றும் கேரள மாநிலத்தில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அங்கு குடும்பத்தினருடன் அருவியில் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர்.
பின்னர் சிறுவர் நீச்சல் குளத்தில் சிறுவர்கள் ஆர்வமுடன் குளித்ததையும் காணமுடிந்தது. அருவியின் மேல்பகுதியில் உள்ள திற்பரப்பு தடுப்பணையில் படகு சவாரி நடந்தது. அதிலும் சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் பயணம் செய்து இயற்கை அழகை ரசித்ததோடு செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.