< Back
மாநில செய்திகள்
தண்டவாள பராமரிப்பு பணிக்காக  குருவாயூர் எக்ஸ்பிரஸ் சாலக்குடி வரை இயக்கப்படும்
மதுரை
மாநில செய்திகள்

தண்டவாள பராமரிப்பு பணிக்காக குருவாயூர் எக்ஸ்பிரஸ் சாலக்குடி வரை இயக்கப்படும்

தினத்தந்தி
|
19 Jan 2023 1:35 AM IST

தண்டவாள பராமரிப்பு பணிக்காக குருவாயூர் எக்ஸ்பிரஸ் சாலக்குடி வரை இயக்கப்படும் என்று ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது


தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட திருவனந்தபுரம் கோட்டத்தில் உள்ள ஒல்லூர் மற்றும் திருப்புணித்துறை ரெயில் நிலையங்களில் உள்ள தண்டவாளங்களில் பராமரிப்பு பணி நடக்க உள்ளது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து, சென்னையில் இருந்து மதுரை வழியாக குருவாயூர் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) வருகிற 21-ந் தேதி மற்றும் 28-ந் தேதிகளில் சாலக்குடி வரை மட்டும் செல்லும். அதாவது, இரிஞ்ஞாலக்குடா, திருச்சூர், பூங்குன்னம், குருவாயூர் ஆகிய பகுதிகளுக்கு ரெயில் இயக்கப்படாது.

மேலும் செய்திகள்