மதுரை
பராமரிப்பு பணிக்காக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் எர்ணாகுளத்துடன் நிறுத்தம்- அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரத்து
|பராமரிப்பு பணிக்காக குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் எர்ணாகுளத்துடன் நிறுத்தப்படுகிறது. அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரத்து செவய்யப்படுகிறது.
கேரள மாநிலம் திருச்சூர் ரெயில் நிலையத்தில் உள்ள பராமரிப்பு பணிமனையில் என்ஜினீயரிங் பராமரிப்பு பணி நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மதுரையில் இருந்து பழனி, பொள்ளாச்சி வழியாக திருவனந்தபுரம் வரை இயக்கப்படும் அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16344) வருகிற 22-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. மறுமார்க்கத்தில், திருவனந்தபுரம்-மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16343) வருகிற 21-ந் தேதி முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, குருவாயூரில் இருந்து மதுரை வழியாக சென்னை செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16128) வருகிற 22-ந் தேதி குருவாயூர்-எர்ணாகுளம் இடையே ரத்து செய்யப்படுகிறது. இந்த ரெயில் எர்ணாகுளம் ரெயில் நிலையத்தில் இருந்து வழக்கமான நேரத்துக்கு சென்னை புறப்படும்.
மறுமார்க்கத்தில் சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16127) வருகிற 21-ந் தேதி எர்ணாகுளம் ரெயில் நிலையம் வரை மட்டும் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.