தூத்துக்குடி
தூத்துக்குடி பள்ளிக்கூடத்தில் குரு பூர்ணிமா கொண்டாட்டம்
|தூத்துக்குடி பள்ளிக்கூடத்தில் குரு பூர்ணிமா கொண்டாடப்பட்டது.
ரிக், யஜூர், சாம, அதர்வண வேதங்களை இயற்றிய வேதவியாசரின் பிறந்த நாளை குருபூர்ணிமாவாக கொண்டாடுகிறோம். அதன்படி தூத்துக்குடி சக்தி வித்யாலயா மெட்ரிக்குலேசன் பள்ளிக்கூடத்தில் குருபூர்ணிமா விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயா சண்முகம் தலைமை தாங்கினார். விழாவில் மாணவ, மாணவிகள் பூக்களை ஆசிரியைகளுக்கு காணிக்கையாக்கி ஆசீர்வாதம் பெற்றனர். ஆசிரியைகள் மாணவ, மாணவிகளுக்கு பூக்களை தூவி வாழ்த்தினர்.
விழாவில் தலைமை ஆசிரியை ஜெயாசண்முகம் பேசும் போது, குரு என்பவர் அறநெறிப்படி, கற்றபடி வாழ்ந்து காட்டுபவர். ஆசிரியர் தான் கற்றதை கற்றுக் கொடுப்பவர். மாணவ, மாணவிகள், ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்டு, கற்றுக் கொடுக்கும் கல்வியைக் கற்று அதன்படி நடந்து வாழ்க்கையில் அவரவர் லட்சியத்தை அடைய வேண்டும் என்று வாழ்த்தினார். விழாவில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.