< Back
மாநில செய்திகள்
நொய்யல் பகுதியில் குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை
கரூர்
மாநில செய்திகள்

நொய்யல் பகுதியில் குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனை

தினத்தந்தி
|
3 Dec 2022 12:35 AM IST

நொய்யல் பகுதியில் குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்திற்கு விற்பனையானது.

நொய்யல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் பூக்கள் பயிர் செய்துள்ளனர். பின்னர்பூக்களை விளைந்தவுடன் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பூ வியாபாரிகள் வாங்கிய உதிரிபூக்களை பல்வேறு ரகமான மாலைகளாகவும், தோரணங்களாகவும் கட்டி விற்பனை செய்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று குண்டு மல்லி கிலோ ரூ.2 ஆயிரத்திற்கும், சம்பங்கி ரூ.120-க்கும், அரளி ரூ.240-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லைப் பூ ரூ.1500-க்கும், காக்கட்டையான் பூ ரூ.900 க்கும், பச்சை முல்லை ரூ.1,500-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும் விற்பனையானது. கடும் பனிப்பொழிவாலும், பூக்களின் தேவை அதிகரித்துள்ளதாலும் விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்