< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
தொடர் மழையால் நிரம்பி வழியும் குண்டாறு அணை - விவசாயிகள் மகிழ்ச்சி...!
|4 July 2022 2:31 PM IST
செங்கோட்டை அருகே உள்ள குண்டாறு அணை நிரம்பியதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
செங்கோட்டை,
தென்காசி மாவட்டத்தில் செங்கோட்டை அருகே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாபகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை துவங்கி கனமழை பெய்து வந்தது.
இதனால் செங்கோட்டை அருகே உள்ள கண்ணுப்புள்ளி மெட்டு என்ற இடத்தில் அமைந்துள்ள குண்டாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் குண்டாறு அணை இன்று நிரம்பியது. அணையின் கொள்ளளவு 36.10 அடி உயரமாகும். குண்டாறு அணை மூலம் ஆயிரத்து123 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.
நேரடியாக 731 ஏக்கரும், மறைமுகமாக 392 ஏக்கரும் பாசன வசதி பெறுகிறது. அணை நிரம்பியதால் விவசாயம் மற்றும் குடிநீர் பாசனத்திற்காக வெளியேற்றப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால்அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.