< Back
மாநில செய்திகள்
களைகட்டியது குந்தாரப்பள்ளி சந்தை: ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

களைகட்டியது குந்தாரப்பள்ளி சந்தை: ஒரே நாளில் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை

தினத்தந்தி
|
10 Nov 2023 3:23 PM IST

பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கிருஷ்ணகிரி மாவட்டம் குந்தாரப்பள்ளியில் வாரந்தோறும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் சந்தை மிகவும் பிரபலமானது. அந்த வகையில் இந்த வாரத்துக்கான சந்தை இன்று நடைபெறுகிறது.

நாளை மறுநாள் தீபாவளி பண்டிகை என்பதால் இன்று சந்தையில் விற்பனை களைகட்டியிருக்கிறது. குறிப்பாக ஆடுகளின் விற்பனை அமோகமாக நடைபெறுகிறது. தீபாவளி பண்டிகை அன்று மக்கள் தங்கள் வீடுகளில் இறைச்சி சமைப்பது வழக்கம். அதனால் சந்தையில் மக்கள் வருகை அதிகரித்துள்ளது.

வழக்கமாக இந்த சந்தையில் உள்ளூர் வியாபாரிகள் மற்றும் அருகே உள்ள மாவட்டங்களிலிருந்து வியாபாரிகள் வருவார்கள். இந்த முறை தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கர்நாடகா, ஆந்திராவில் இருந்தும் வியாபாரிகள் வந்துள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. வழக்கத்தைவிட இன்று விலையும் சற்று அதிகமாக உள்ளது. ஒரு ஆடு குறைந்தபட்சம் ரூ.10,000 முதல் ரூ.12,000 வரை விற்பனையாகிறது. ஒரு ஜோடி ரூ.30,000 முதல் ரூ35,000 வரை விற்பனையாகிறது. மதிய நிலவரப்படி சுமார் ரூ.7 கோடிக்கு ஆடுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. தொடர்ந்து விற்பனை விறுவிறுப்பாக நடைபெறுகிறது.

மேலும் செய்திகள்