< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
வத்தல்மலையில்சாலையோரம் கிடந்த நாட்டுத்துப்பாக்கி மீட்பு
|2 May 2023 12:30 AM IST
தர்மபுரி மாவட்டம் பொம்மிடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விக்னேஷ் மற்றும் போலீசார் வத்தல்மலை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது 13-வது கொண்டை ஊசி வளைவு பகுதியில் உள்ள முட்புதரில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்து அந்த பகுதிக்கு சென்ற போலீசார் நாட்டுத்துப்பாக்கியை கைப்பற்றினர். பின்னர் அதனை பொம்மிடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அந்த துப்பாக்கி யாருடையது? எதற்காக அங்கு வீசி விட்டு சென்றார்கள்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முட்புதரில் நாட்டுத்துப்பாக்கி கிடந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.