< Back
மாநில செய்திகள்
தர்மபுரி
மாநில செய்திகள்
மாரண்டஅள்ளி அருகே கேட்பாரற்று கிடந்த நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்
|23 Dec 2022 12:15 AM IST
மாரண்டஅள்ளி:
மாரண்டஅள்ளி அருகே சாஸ்திரமுட்லு பகுதியில் மாரண்டஅள்ளி போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் தணிகாசலம் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கண்கட்டிபள்ளம் பகுதியில் உள்ள பாலத்தின் அடியில் நாட்டுத்துப்பாக்கி ஒன்று கேட்பாரற்று கிடந்ததை கண்டு அவற்றை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து நாட்டுத்துப்பாக்கியை போட்டு சென்றவர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.