< Back
மாநில செய்திகள்
கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா தேதி மாற்றம் - ஜூன் 20-ந்தேதி திறக்க உள்ளதாக தகவல்
மாநில செய்திகள்

கிண்டி பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா தேதி மாற்றம் - ஜூன் 20-ந்தேதி திறக்க உள்ளதாக தகவல்

தினத்தந்தி
|
25 May 2023 5:34 PM IST

கிண்டி மருத்துவமனை திறப்பு விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கலந்து கொள்வார் என தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை ஜனாதிபதி திரவுபதி முர்மு வரும் ஜூன் 5-ந்தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவமனையின் திறப்பு விழா தேதி மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி வரும் ஜூன் 20-ந்தேதி ஜனாதிபதி திரவுபதி முர்மு, கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பார் என்று தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த பன்னோக்கு மருத்துவமனை சுமார் 230 கோடி ரூபாய் மதிப்பீட்டில், ஆயிரம் படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


மேலும் செய்திகள்