< Back
மாநில செய்திகள்
பள்ளிகளில் சத்து மாத்திரை வழங்குவதில் வழிகாட்டுதல்... - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
மாநில செய்திகள்

"பள்ளிகளில் சத்து மாத்திரை வழங்குவதில் வழிகாட்டுதல்..." - அமைச்சர் மா.சுப்பிரமணியன்

தினத்தந்தி
|
19 March 2023 7:41 PM IST

பள்ளிகளில் மருத்துவத்துறை வழிகாட்டுதலின் படி மாத்திரை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் பிறந்த விழாவின் ஒரு பகுதியாக திமுக தெற்கு மாவட்டம் தகவல் தொழில்நுட்ப அணி சார்பில் பள்ளி மாணவ மாணவிகளுக்கு புத்தகப்பை மற்றும் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சென்னை மேற்கு சைதாப்பேட்டையில் நடந்த இந்நிகழ்வில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், பள்ளிகளில் மருத்துவத்துறை வழிகாட்டுதலின் படி மாத்திரை வழங்குவதை உறுதிப்படுத்த வேண்டும் என்றும், இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.


மேலும் செய்திகள்