< Back
மாநில செய்திகள்
கூடலூர் ஆரஞ்சு அணி வெற்றி
நீலகிரி
மாநில செய்திகள்

கூடலூர் ஆரஞ்சு அணி வெற்றி

தினத்தந்தி
|
15 July 2023 1:15 AM IST

மாவட்ட அளவிலான பி டிவிஷன் கிரிக்கெட் போட்டியில் கூடலூர் ஆரஞ்சு அணி வெற்றி பெற்றது.

கோத்தகிரி

நீலகிரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், மாவட்ட அளவிலான ஏ, பி மற்றும் சி டிவிஷன் கிரிக்கெட் போட்டி கோத்தகிரி காந்தி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த பி டிவிஷன் பிரிவிற்கான லீக் போட்டியில் ஊட்டி கேங் ஸ்டார் அணியும், கூடலூர் ஆரஞ்சு அணியும் மோதியது. இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஊட்டி கேங் ஸ்டார் அணி நிர்ணயிக்கப்பட்ட 35 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 198 ரன்கள் எடுத்தது. அந்த அணி வீரர்கள் ஹர்ஷந்த் 76 ரன்கள், சூர்யா 46 ரன்கள், பிரபு 27 ரன்கள் எடுத்தனர். கூடலூர் ஆரஞ்சு அணியின் பந்து வீச்சாளர் சந்தோஷ் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து 210 பந்துகளில் 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய கூடலூர் ஆரஞ்சு அணி 23.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் மட்டும் இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதன் மூலம் கூடலூர் ஆரஞ்சு அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மேலும் செய்திகள்