< Back
மாநில செய்திகள்
குன்றத்தூர் அருகே வாகனம் மோதி காவலாளி பலி
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

குன்றத்தூர் அருகே வாகனம் மோதி காவலாளி பலி

தினத்தந்தி
|
15 March 2023 2:37 PM IST

குன்றத்தூர் அருகே வாகனம் மோதி் காவலாளி பரிதாபமாக இறந்தார்.

பம்மல், எல்.ஐ.சி.காலனி 6-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அரிகரன் (வயது51), இவர் திருமுடிவாக்கம் சிப்காட் பகுதியில் உள்ள கம்பெனி ஒன்றில் காவலாளியாக பணி புரிந்து வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பணி முடிந்ததும் தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார்.

திருமுடிவாக்கம் - திருநீர்மலை செல்லும் பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தபோது அடையாளம் தெரியாத கனரக வாகனம் ஒன்று அரிகரன் வந்த மோட்டார் சைக்கிள் மீது பலமாக மோதியது.

இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அரிகரன் அதே இடத்திலேயே துடி, துடித்து பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அரிகரன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்